search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் மூலம் கலந்தாய்வு"

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. #TNEA2018 #Engineering #AnnaUniversity #TNEAOnlineCounselling

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த அரசு முடிவு செய்தது. இதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அடுத்த மாதம் ஆன்லைன் கலந்தாய்வு நடக்க உள்ளது. இதற்காக ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் தொடங்கியது.

    இந்நிலையில், ஆன்லைன் கலந்தாய்வுக்கு எதிராக திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆன்லைன் கலந்தாய்வால் கிராமப்புற மற்றும் தமிழ்வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஆன்லைன் கலந்தாய்வுடன் பழைய முறையையும் பின்பற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.  இதேபோல் வழக்கறிஞர் பொன் பாண்டியனும் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட், இந்த வழக்கில், தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகம் ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

    இந்த வழக்கில் நேற்று ஐகோர்ட் தீர்ப்பளித்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆன்லைன் முறையை மக்கள் ஏற்றுக்கொண்டதால் தடை விதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNEA2018 #Engineering #AnnaUniversity #TNEAOnlineCounselling
    ×